நடப்பு ஐபிஎல் சீசன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் அடைந்துள்ளது. சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளரான தீபக் சஹாருக்கு கடந்த போட்டியின் போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். ஏற்கனவே மதிஷா பதிரனா காயம் காரணமாகவும், துஷார் தேஷ்பாண்டே காய்ச்சல் காரணமாகவும் ஆடவில்லை.
இந்தநிலையில், கிரிக்கெட் வாழ்க்கையில் தோனியை எனது தந்தையாக பார்க்கிறேன் என்று சென்னை அணி பந்துவீச்சாளர் மதிஷா பதிரனா தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “கிரிக்கெட் வாழ்க்கையில் தோனியை எனது தந்தையாக பார்க்கிறேன். அவர் என்னை கவனித்துக்கொள்கிறார். நான் வீட்டில் இருக்கும் போது எனது தந்தை எனக்கு எப்படி அறிவுறை கூறுவாரோ, அதைப் போல கிரிக்கெட் ஆடுகளத்தில் தோனி எனக்கு அறிவுரை கூறுகிறார்.
நான் களத்தில் இருக்கும் போதும், களத்திற்கு வெளியே இருக்கும் போதும் என்னிடம் நிறைய விஷயங்களை சொல்ல மாட்டார். ஆனால், அவர் சொல்லிக்கொடுக்கும் சின்ன சின்ன விஷயங்கள் கூட எனக்குள் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி நம்பிக்கை கொடுக்கிறது.
அணியின் வீரர்களை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்கு தெரியும். களத்திற்கு வெளியே நான் அவரிடம் பெரிதாக பேச மாட்டேன். ஆனால், எனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் அவரிடம் நிச்சயமாக கேட்பேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராகுல் பிரதமராக பாக். தலைவர்கள் பிரார்த்தனை: மோடி விமர்சனம்!
காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரணம்: ரூபி மனோகரன் விளக்கம்!