டேவிட் வார்னர் ரிட்டையர் ஆகியிருக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங் அதிரடி!

விளையாட்டு

பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை பெற்றாலும் 3 வது போட்டியில் வெற்றி பெற்றது.

ஆனாலும் அந்த அணியின் டேவிட் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக தன்னுடைய 100 வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரராக வரலாறு படைத்த அவர் மீண்டும் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்க்கப்பட்டதை விட சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் , டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா அணியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்நேரம் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றும் தனது சொந்த மண்ணில் இரட்டை சதமடித்து சாதனை படைத்த போதே சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் ஓய்வு பெறும் நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை அவர் தவற விட்டு விட்டதாக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஐசிசி பாட்காஸ்டில் கலந்து கொண்டு பேசிய அவர் “தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆஷஸ் தொடருக்கு முன்பாக முடிய உள்ளது.

அனைத்தும் நன்றாக செல்லும் பட்சத்தில் அந்த ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி வரை டேவிட் வார்னரை விளையாட வைக்க அவர்கள் விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்.

இருப்பினும் அந்த முடிவு அவருடையதாகும். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக இருக்கும் நீங்கள் ரன்களை அடிக்கவில்லை என்றால் நீங்களாகவே உங்களது இடத்தை காலி செய்ய வேண்டும்” என்றார்.

மேலும், “அது போன்ற நிலைமைகள் என்னை போன்றவர்களுக்கும் நடந்துள்ளது. குறிப்பாக இந்த வயதில் உங்களுடைய ஃபார்ம் குறையும் போது உங்களுக்கு எதிராக கூரான கத்திகள் பட்டை தீட்டப்படும். அதில் நீண்ட காலம் தப்பிக்க முடியாது.

David Warner should have retired Ricky Ponting action

என்னை கேட்டால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியுடன் அவர் விடை பெற்றிருக்க வேண்டும்.

ஏனெனில் மெல்போர்னில் அவர் தன்னுடைய 100 வது போட்டியில் இரட்டை சதமடித்தார்.

எனவே தனது சொந்த ஊரான சிட்னியில் விளையாடிய 101 வது போட்டியில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் சிறப்பாக கேரியரை பினிஷிங் செய்திருக்கலாம்.

ஆனால் இப்போது இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பாதியில் நீக்கப்பட்டுள்ளதால் அவருடைய கேரியர் முடிவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த வகையில் அவருடைய கேரியர் முடிந்தால் அது சிறப்பாக இருக்காது.

இருப்பினும் போராடும் தன்மை கொண்ட அவருடைய கேரியர் எந்தளவுக்கு செல்கிறது என்பதை பார்ப்போம்” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கிச்சன் கீர்த்தனா: சுறா மீன் புட்டு!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *