ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான
டி20 தொடருக்கான இந்திய அணிகளை பி.சி.சி.ஐ இன்று (செப்டம்பர் 12 ) அறிவித்துள்ளது.
இதில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா,
ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல்,
அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் காத்திருப்பு வீரர்களாக உள்ளனர்.
ஆஸ்திரேலியா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்),
தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்),
தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
காயம் காரணமாக இந்திய அணி வீரர் ரவீந்தர ஜடேஜா இந்த அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உலகக்கோப்பை டி20 : கடைசி அணிகளாக நுழைந்த ஜிம்பாப்வே, நெதர்லாந்து!