டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை போலீசார் இன்று (மே 18) கைது செய்தனர்.
டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி-யுமான ஸ்வாதி மாலிவால் கெஜ்ரிவால் வீட்டில் அவரது உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக டெல்லி சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதன்பேரில் பிபவ் குமார் மீது மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இராணி ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
“கெஜ்ரிவால் மீது பொய் வழக்கு போட வேண்டும் என்பதற்காக பாஜக சதி செய்கிறது” என்று ஆம் ஆத்மி எம்.பி அதிஷி குற்றம்சாட்டியிருந்தார்
இந்தநிலையில், கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து பிபவ் குமாரை இன்று டெல்லி சிவில் லைன்ஸ் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
முன்னதாக டெல்லி சிவில் லைன்ஸ் போலீசாருக்கு பிபவ் குமார் அனுப்பிய மெயிலில், “விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கிறேன். ஆனால், ஸ்வாதி மாலிவால் மீது நான் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜய்யின் தி கோட்… வெங்கட் பிரபு வெளியிட்ட VFX அப்டேட்!
தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் கனமழை? வானிலை மையம் ரிப்போர்ட்!