தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருநங்கை மாணவி நிவேதா வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 1 முதல் 22 வரை நடைபெற்ற பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று (மே 6) வெளியிடப்பட்டது.
இதில் 94.56 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த திருநங்கை மாணவி நிவேதா நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி இருந்தார்.
அவர் 283 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் தேர்வு எழுதிய ஒரேஒரு திருநங்கை மாணவி நிவேதாதான்.
பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த நிவேதா கடந்த 2015ஆம் ஆண்டில் திருநங்கைகளுடன் தன்னை இணைத்துள்ளார். நிவேதா படிக்கும் லேடி வெலிங்டன் பள்ளியில் மாணவர் பேரவை தலைவராக இருந்துள்ளார்.
இவர் நேற்று நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வையும் எழுதி உள்ளார். மருத்துவராக வேண்டும் என்பது நிவேதாவின் ஆசை என அவர் தெரிவித்துள்ளார்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி நிவேதாவை பள்ளி முதல்வர் ஹேமமாலினி பாராட்டினார்.
பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரண்மனை 4 : மூன்று நாட்களில் இவ்ளோ கோடி வசூலா?
+2 ரிசல்ட்… அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் எவ்வளவு? மறுகூட்டல் எப்போது?