காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா என்ற கேள்விக்கு பிரியங்கா காந்தி பதிலளித்துள்ளார்.
ராகுல் காந்தி இந்த முறை வயநாடு மற்றும் ரேபரலி தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வயநாடு தொகுதியில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நாளை ரேபரலி தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, தனது சொந்த தொகுதியான ரேபரலியில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை இந்த தொகுதி மக்களிடம் ஒப்படைக்கிறேன். அவருக்கு நீங்கள் வெற்றி வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதுபோன்று பத்து நாட்களுக்கும் மேலாக ரேபரலி தொகுதியில் தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார் பிரியங்கா காந்தி.
இது ரேபரலி அல்ல ராகுல்பரேலி என்று பெயர் அச்சிடப்பட்ட வாகனத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் இந்தியா டுடேவுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “ராகுல் காந்தி ஒரு நல்ல பிரதமராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவினர் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த பதிலை அளித்துள்ளார்.
ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பாரா என்ற கேள்விக்கு, “ராகுல் காந்தி எப்போதும் மக்களுக்காக நிற்பவர். இந்த நாட்டின் நாடித்துடிப்பை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.
எனவே அவர் சிறந்த பிரதமராக வருவார். அவருக்கு இந்து மதம் பற்றி நன்கு தெரியும். இதுகுறித்து விவாதம் நடத்த வந்தாலும் ராகுல் காந்தியிடம் பிரதமர் மோடியால் பேச முடியாது.
ராகுல் காந்தி யாரை கண்டும் அஞ்ச மாட்டார். நாட்டில் எந்த தலைவரும் இந்த அளவுக்கு குறி வைத்து தாக்கப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
அதேநேரம், நாங்கள் இந்தியா கூட்டணியில் இருந்து இந்த தேர்தலை சந்திக்கிறோம். எனவே அடுத்த பிரதமர் யார் என்பதை இந்தியா கூட்டணி தலைவர்களே தேர்ந்தெடுப்பார்கள்” என்று பிரியங்கா காந்தி கூறினார்.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: எனக்கு எதற்கு உடற்பயிற்சி என்று நினைப்பவரா நீங்கள்?
சித்தார்த் 40 படத்தின் இயக்குநர் இவர் தான்..!
வேலைவாய்ப்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் பணி!
மீண்டும் கொரோனா அலை: சிங்கப்பூரில் 25,900 பேர் பாதிப்பு!
Comments are closed.