டாப் 10 செய்திகள் ; இந்த செய்திகளை மிஸ் பண்ணாதீங்க!

Published On:

| By Selvam

தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 29) மாலை 6 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. ஆன்லைன் ரம்மி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அருணா ஜெகதீசன் அறிக்கை, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.

மீனவர்கள் வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையினர் கைது செய்த ஆறு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

நேற்று (ஆகஸ்ட் 29) நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று நியூயார்க் நகரில்  தொடங்கி செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை யார் தட்டிச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் இன்று 100-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை மெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா அப்டேட்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 525 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 596 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35,67,160 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 5,268 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மார்க் ஆண்டனி ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை 11.11 மணிக்கு வெளியாகிறது

சென்னையில் மழை

சென்னையில் இன்று அதிகாலை முதல் நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, வடபழனி, கோயம்பேடு, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது

அக்டோபரில் வெளியாகும் பார்டர் திரைப்படம்

நடிகர் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படம் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சென்னையில் கொட்டி தீர்த்த மழை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share