தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் சுந்தர் சி. தற்போது இவரது இயக்கத்தில் அரண்மனை 4 படம் கடந்த மே 3 ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தில் மெயின் ஹீரோவாக சுந்தர்.சி நடிக்க, இவருடன் நடிகர்கள் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, VTV கணேஷ், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அரண்மனை 1,2&3 ஆகிய படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் தற்போது வெளியாகி உள்ள அரண்மனை 4 படமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்ட தொடங்கி உள்ளது.
அரண்மனை 4 வெளியான முதல் நாளிலேயே இந்திய அளவில் 4.65 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது நாளில் 6.65 கோடி ரூபாயும், மூன்றாவது நாளில் 7.5 கோடி ரூபாயும் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மூன்று நாட்களில் அரண்மனை 4 படம் இந்தியாவில் மட்டும் 18.80 கோடி ரூபாயும், ஓவர்சீஸில் 2+ கோடி ரூபாயும் வசூல் செய்து உலக அளவில் மொத்தமாக 22 கோடி ரூபாய் வசூலுடன் ஹிட் பட்டியலில் இணைந்துள்ளது.
வரும் அடுத்தடுத்த நாட்களிலும் அரண்மனை 4 படத்தின் வசூல் இப்படியே தொடர்ந்தால் நிச்சயம் 50 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தக் லைஃப் : கமல் – சிம்பு மாஸ் லுக்… வைரல் புகைப்படம்!
மாரி செல்வராஜ் – துருவ் படத்தின் மிரட்டலான டைட்டில்!