நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது இன்று (மே 3) வழங்கப்பட்டது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் 2023 டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்த் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய காலங்களில் தான் அனுபவித்த பசிக்கொடுமையை யாரும் அனுபவிக்கக்கூடாது என்பதற்காக தன் படங்களில் லைட் யூனிட், சவுண்ட் யூனிட்டில் இருந்து அனைவருக்கும் ஒரே சாப்பாட்டை வழங்குவதை வழக்கமாக்கினார். இதை அவர் சில பேட்டிகளிலும் கூறியிருக்கிறார்.
அங்கு மட்டுமல்ல வீட்டிலும் விஜயகாந்த் இதையே கடைபிடித்தார். தன் வீட்டிற்கு வரும் யாரும் பசியோடு திரும்பிச் செல்லக்கூடாது என்ற கொள்கையில் அவர் தீர்மானமாக இருந்தார்.
இவரது கொள்கை தற்போது அவரது நினைவிடத்திலும் கடைபிடிக்கப்படுகிறது. அவர் உயிரிழந்து 125 நாட்கள் கடந்தாலும், தற்போது வரை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இதுவரை சுமார் 15 லட்சம் பேர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்துபவர்களுக்கு தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த் நினைவிடத்தில் தனது வாழ்நாள் முழுக்க அன்னதானம் நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரது நினைவிடத்திற்கு வந்த பொது மக்களின் எண்ணிக்கையையும் அவர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தையும் கருத்தில் கொண்டு ”லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” சார்பில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தோனி கொடுத்த கிஃப்ட்: முஸ்தபிசுர் ரஹ்மான் சொன்ன அந்த விஷயம்!
இந்த பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ பாஸ் தேவையில்லை :உதகை ஆர்டிஓ அறிவிப்பு!