Rinku Singh's Father Reveals

“பட்டாசுகள் வாங்கி வைத்திருந்தோம்”: ரிங்கு சிங்கின் தந்தை உருக்கம்!

விளையாட்டு

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 2024 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை, பிசிசிஐ நேற்று (ஏப்ரல் 30) அறிவித்திருந்தது.

ரோகித் சர்மா தலைமையிலான அணியில், யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாத், ரவி பிஸ்னாய், ஷ்ரேயஸ் அய்யர் போன்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் இந்த அணியில் இடம் பிடிக்கவில்லை.

அதேபோல, நடராஜன், சாய் சுதர்சன், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர்களுக்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை.

அதேபோல, 2023 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடி, இந்திய அணியில் இடம் பிடித்த ரிங்கு சிங்கும் இப்பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

சர்வதேச டி20 போட்டிகளில், இந்திய அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி, 89.00 சராசரி, 176.23 ஸ்ட்ரைக் ரேட்டுடன், இதுவரை 356 ரன்கள் சேர்த்துள்ள ரிங்கு சிங், ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருடன், சுப்மன் கில், கலீல் அகமது, அவ்ஸ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 15 பேர் கொண்ட இந்திய அணியில் சேர்க்கப்படாதது குறித்து, ரிங்கு சிங் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக, அவரின் தந்தை கான்சந்திரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அதனால் தான் தற்போது மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் 11 பேர் கொண்ட இந்திய டி20 அணியில் ரிங்கு சிங் களமிறங்கி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன், அதை கொண்டாடுவதற்காக இனிப்புகள், பட்டாசுகள் என அனைத்தையும் வாங்கி வைத்திருந்தோம்.

ஆனால், தற்போது அவர் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார்”, என கான்சந்திரா தெரிவித்துள்ளார்.

மேலும், “தான் 15 பேர் கொண்ட அணியிலும், 11 பேர் கொண்ட அணியிலும் இடம்பெறவில்லை என்று ரிங்கு சிங்தான், அவரது அம்மாவிற்கு அழைத்து தெரிவித்தார்.

ஆனால், இந்திய அணியுடன் பயணிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்”, எனவும் கான்சந்திரா தெரிவித்துள்ளார்.

ரிங்கு சிங் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து, கிரிக்கெட் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்றோர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: ‘நான் ஏன் அழகாக இல்லை?’ என்று நினைப்பவரா நீங்கள்?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பனானா கேக்

சிஎஸ்கேவை சிதறடித்த பஞ்சாப்: 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *