திடீரென சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை… காரணம் இதுதான்… அவரே வெளியிட்ட பதிவு..!

சினிமா

சன் டிவியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. தனது வெள்ளந்தியான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

ரோஜா சீரியல் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சீதாராமன்’ என்ற சீரியலில் கமிட்டானார்.

ஆனால் அதில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ராகுல் வர்மாவை அவர் திருமணம் செய்து கொண்டார்.

மீண்டும் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நல தமயந்தி’ என்ற சீரியலின் மூலம் ஹீரோயினாக நடிக்க வந்தார்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், சீரியலில் அவர் இறந்து விடுவது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. அவருக்கு பதில் நடிகை ஸ்ரீநிதி ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடிகை பிரியங்கா நல்காரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “மக்களே உங்கள் கற்பனைக்கு வந்ததையெல்லாம் வதந்திகளாக பரப்ப வேண்டாம். நானாக சீரியலில் இருந்து விலகவில்லை. அடுத்த ஷெடியூலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்ற உண்மை சீக்கிரமே வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜெயக்குமார் தனசிங் கொலை…போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்… வெளிவராத விசாரணைத் தகவல்கள்!

மணல் குவாரி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தக் லைஃப் : கமல் – சிம்பு மாஸ் லுக்… வைரல் புகைப்படம்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *