நடிகை, கதையாசிரியர், தயாரிப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் சுஹாசினி. 60 வயதைக் கடந்த சுஹாசினி கதாநாயகியாக தன்னை இனிமேல் யாரும் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என்பதை அறியாதவரல்ல.
இருந்தபோதிலும், வயதானாலும் வாலிப எண்ணம் ஆழ்மனதில் ஆட்சி செய்யும் என்பார்கள். இன்றைய இளம் நடிகைகள் போன்று ஆடை குறைத்து இல்லாமல் முழுமையாக ஆடை அணிந்து அவர் திரைப்படங்களில் நடிக்கும் போது குடும்ப பாங்காக நடித்திருப்பார்.
அதேபோன்று குடும்ப பாங்காக உடையணிந்து முகபாவங்களால் கிளாமர் புகைப்படம் எடுக்க முடியும் என்பதை ஒரு போட்டோசூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார் நடிகை சுஹாசினி.
அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களுடன் அவரை பற்றிய முன்னோட்டம் இலவச இணைப்பாக…
கமல்ஹாசனின் உடன்பிறந்த சகோதரரான சாருஹாசனின் மகள் தான் சுஹாசினி மணிரத்னம். 1980 மற்றும் 1990 களில் தமிழில், விஜயகாந்த், ரஜினிகாந்த், சத்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துப் பிரபலமானவர் சுஹாசினி.
நடிகை சுஹாசினி, தன்னுடைய சித்தப்பாவை தொடர்ந்து… 1980 ஆம் ஆண்டு வெளியான ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்துக்கே சிறந்த அறிமுக நடிகைக்காகத் தமிழ் நாடு ஸ்டேட் பிலிம் அவார்டுக்கு நாமினேட் செய்யப்பட்டார்.
மேலும், முதல் படத்திற்காக பிலிம் ஃபேர் விருதையும் பெற்றார். இந்த படத்தைத் தொடர்ந்து, குடும்பம் ஒரு கதம்பம், தெய்வ திருமணங்கள், பாலைவன சோலை, போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார். தென்னிந்திய மொழி படங்களை அடுத்து ஹிந்தி மற்றும் இங்கிலீஷ் போன்ற மொழிகளிலும் சுஹாசினி நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை சுஹாசினி இயக்குநர் மணிரத்னத்தின் படத்தில் பணியாற்றும் போது, இருவருக்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறவே, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
நடிகை என்பதைத் தாண்டி இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் எனத் திரையுலகில் தன்னுடைய பன்முக திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அதே போல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர்.
தற்போது இவருக்கு 61 வயது ஆகும் நிலையில், 25 வயது இளம் ஹீரோயினை போல்… பட்டுச் சேலையில் எடுத்துக் கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் சில இதோ..
இராமானுஜம்
அமலாக்கத்துறை அறிவிப்பு: பஞ்சநாமா பட்டியலை வெளியிட தேஜஸ்வி கோரிக்கை!
அதிமுகவை அழிக்க போராடும் திமுகவின் ‘பி’ டீம் – எடப்பாடி ஆதங்கம்