தமிழ் சினிமா திரையுலகில் கமர்ஷியல் பட இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் ஹரி. இவரது இயக்கத்தில் வெளியான ஆறு, சாமி, அருள், தாமிரபரணி, சிங்கம் போன்ற திரைப்படங்கள் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை.
தற்போது ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாக உள்ள படம் ரத்னம்.
இந்த படத்தில் நடிகர்கள் ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
ரத்னம் திரைப்படத்தின் ரிலீசை முன்னிட்டு இந்த படத்தின் புரோமோஷனுக்காக பல சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்து வரும் இயக்குநர் ஹரி,
சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் லோகேஷ், அட்லீ ஆகியோர் தான் தற்போது தனது வாத்தியார்கள் என்று கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த பேட்டியில் ஹரி கூறியதாவது,
“சினிமாவில் ஒவ்வொரு சீசனிலும் யாரெல்லாம் நல்ல படங்களை எடுக்கிறார்களோ அவர்களை ரசிப்பது மட்டுமின்றி அவர்களை நான் மாஸ்டராக எடுத்துக் கொள்வேன், முதலில் நான் படம் எடுக்கும்போது எனது குருநாதரை வாத்தியாராக எடுத்துக் கொண்டேன்.
இப்போது லோகேஷ் ஆகட்டும், நெல்சன் ஆகட்டும், அட்லீ ஆகட்டும், அட்லீ ஒரு படத்திற்கு எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்று என்னால் உணர முடிகிறது.
அதேபோல் இயக்குநர் லோகேஷ் அவர்கள் எப்படி எடுக்கிறார் என்பது எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது அவர்கள் தான் எனக்கு வாத்தியார்கள் என்று சொல்லலாம். அவர்களை வாத்தியார் என்று சொல்வதால் அவர்களைப் போலவே எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அவர்கள் எப்படி ஒரு படத்தை எடுக்கிறார்கள் எப்படி ரசிகர்களுடன் அந்த கனெக்ட்டை உருவாக்குகிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்து அதிலிருந்து சில விஷயங்களை கற்றுக் கொண்டு அப்டேட் ஆகுகிறேன்” என்று இயக்குநர் ஹரி கூறியுள்ளார்.
இயக்குநர் ஹரியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ தொடங்கியது மட்டுமின்றி, இளம் தலைமுறை இயக்குநர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன், அவர்களை ரசிக்கிறேன் என்று ஹரி கூறியதற்கு சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: கோடைக்கேற்ற ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சைப் பழங்களை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: முழங்கைகளில் உள்ள கருமை மறைய எளிய தீர்வு!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: பப்பட் ரோல்