டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் டி20க்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், தமிழகத்தை சேர்ந்த நடராஜனுக்கு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 தொடரில் ஐதராபாத் அணிக்கு பக்கபலமாக சிறப்பாக நடராஜன் பந்து வீசி வருகிறார். இருந்தும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே “நடராஜன்” என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.
இந்நிலையில், இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “வேக மாறுபாடுகளுடன் யார்க்கர் பந்துகளை மிக நேர்த்தியாக வீசும் திறன் கொண்டவர் நடராஜன். ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் பேட்டர்கள் அதிரடியாக விளையாடும்போது அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
நடராஜன் சிறப்பாக விளையாடும் போது, இந்திய கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட்டில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
அப்படிப்பட்ட கிரிக்கெட் வீரர் நடராஜன் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது” என ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தகிக்கும் வெயில்… ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் சென்னையில் தொழிலாளி பலி!
சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு: எஃப்.ஐ.ஆர் சொல்வது என்ன?