கடந்த மார்ச் 31 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய ஐபிஎல் 16 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 20) நடைபெறும் 27 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்– ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
பஞ்சாப் அணியை பொறுத்தவரை இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது.
அந்த அணி கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கு எதிராக வெற்றியும், ஐதராபாத், குஜராத் அணிகளுக்கு எதிராக தோல்வியையும் சந்தித்தது.
இருப்பினும் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் அந்த அணி, சொந்த மண்ணில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
வரிசையாக தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இப்போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
தொடரின் ஆரம்பத்தில் மும்பை அணியை வீழ்த்திய தெம்புடன் டெல்லி அணியை எதிர்கொண்டு அந்த அணிக்கு எதிராகவும் வெற்றி பெற்றது.
ஆனால், கொல்கத்தா, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்து, அதிர்ச்சி கொடுத்தது.
வரிசையாக தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , இப்போட்டியில் இருந்தாவது வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற இலக்குடன் களம் காண இருக்கிறது.
இந்த ஆண்டாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு திடீரனெ தோல்வி பாதையில் பயணித்துக் கொண்டிருப்பது அந்த அணி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
அதேநேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 போட்டிகளிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கிறது.
அந்த வெற்றிக் கணக்கை பஞ்சாப் அணி இன்றும் தொடருமா? அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி பாதையில் இருந்து வெற்றிப் பாதைக்கு வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
பஞ்சாப் அணி உத்தேச ஆடும் 11 வீரர்கள்
ஷிகர் தவான், மேத்யூ ஷார்ட், ஹர்பிரீத் சிங், சிக்கந்தர் ராசா, சாம் கரன் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா(wk) , ஷாருக் கான், ஹர்பிரீத் ப்ரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், பிரப்சிம்ரன் சிங்
பெங்களூரு அணி உத்தேச ஆடும் 11 வீரர்கள்
ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி (கேப்டன்) , மஹிபால் லோம்ரோர், க்ளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக்(wk), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்க, வெய்ன் பார்னெல், வைஷாக் விஜய் குமார், முகமது சிராஜ், சுயாஷ் பிரபுதேசாய்
மு.வா.ஜெகதீஸ் குமார்
எடப்பாடிக்கு வெற்றி: தேர்தல் ஆணையத்தின் கடிதம் என்ன சொல்கிறது?
ஓபிஎஸ் இனி அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது: பொள்ளாச்சி ஜெயராமன்