இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி இன்று (செப்டம்பர் 25 ) ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த இரண்டு அணிகளும் ஒன்றுக்கு (1-1) ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், கடைசி போட்டியான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் களமிறங்கினர்.
ஆரோன் பிஞ்ச் 7 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஸ்டீவன் சுமித் 9 ரன்களும், மேக்ஸ்வெல் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீன் பந்துகளை சிதறடித்தார். 19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 52 ரன்னில் அவுட்டானார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை டிம் டேவிட் சரிவில் இருந்து மீட்டார். அவரின் அரைசதத்தால் (54) ஆஸ்திரேலியா அணி நல்ல ஸ்கோரை எட்டியது.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்திய அணி வீரர் அக்சர் படேல் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கடைசி டி20 போட்டியில் செய்யப்பட்ட மாற்றம்!
ஆதார் இல்லாமல் திருமணத்துக்கு வரக் கூடாது: இதென்ன புதுக்கூத்து?