தகிக்கும் வெயில்… ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் சென்னையில் தொழிலாளி பலி!
சென்னையில் கடும் வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் கட்டுமான தொழிலாளி சச்சின் இன்று (மே 5) உயிரிழந்தார்.
தமிழகத்தை பொறுத்தவரை கடுமையான வெப்ப அலை கடந்த சில நாட்களாக வீசி வருகிறது. இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது.
இதனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என சுகாதாரத்துறை சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், நேற்று (மே 4) முதல் அதிகமாக வெப்பம் நிலவும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் ஆரம்பித்துள்ளது. இதனால், வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும்.
இந்தநிலையில், சென்னையை அடுத்த மீஞ்சூர் நெடுஞ்சாலையில் கட்டுமான பணியை மேற்கொண்டு இருந்த வட மாநில தொழிலாளி சச்சின் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சச்சின் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று மேலும் ஒரு தொழிலாளி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல்மலையனூரை சேர்ந்த கட்டுமான தொழிலாளியான இவருக்கு கல்லீரல், கணையம், சிறுநீரகம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு: எஃப்.ஐ.ஆர் சொல்வது என்ன?
சினிமா பிரியர்களுக்கு குட் நியூஸ்: புதிதாக களமிறங்கும் “ஓடிடி பிளஸ்”