விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் ஏற்கெனவே சிசிடிவி கேமிராக்கள் பழுதாகி சரி செய்யப்பட்ட நிலையில், இன்று (மே 8) மீண்டும் பழுதாகியுள்ளது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அங்கு கடந்த 3ஆம் தேதி ஸ்டிராங் ரூம் சி.சி.டி.வி கேமராக்கள் திடீரென சுமார் 30 நிமிடங்கள் செயலிழந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த அம்மாவட்ட ஆட்சியர் பழனி, “யு.பி.எஸ்.-ல் மின்தடை ஏற்பட்டதால் சிசிடிவி செயலிழந்தன. சிறிது நேரத்தில் அவை சரி செய்யப்பட்டது” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 5 நாட்களே ஆன நிலையில் இன்றும் ஸ்டிராங் ரூமில் உள்ள 39 சிசிடிவி கேமராக்களில், 7 சி.சி.டி.வி கேமராக்கள் சுமார் ஒரு மணி நேரமாக திடீரென இயங்கவில்லை.
இதுகுறித்து வேட்பாளர்களின் முகவர்கள் தேர்தல் அலுவலரிடம் உடனடியாக புகாரளித்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பழனி இன்று அளித்துள்ள விளக்கத்தில், ”கோடை கனமழை காரணமாக ஏற்பட்ட மழை, காற்றால் 7 சிசிடிவி கேமிராக்கள் மட்டும் பழுதாகியுள்ளன. விரைவில் அது சரி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும் இரண்டாவது முறையாக வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமிராக்கள் பழுதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Gold Rate: இதுக்கு தங்கம் விலை குறையாமலே இருக்கலாம்… எதுக்கு?
”எனது பிரபலத்திற்கு ’புஷ்பா’ தான் காரணமா? : பகத் பாசில் நச் பதில்!