மக்களவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) வெளியிட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக, தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்பு மனு தாக்கல் – மார்ச் 20
மனு தாக்கல் முடிவு – மார்ச் 27
மனு பரிசீலனை – மார்ச் 28
வேட்பு மனு திரும்ப பெற கடைசித் தேதி – மார்ச் 30
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்னும் சரியாக 32 நாட்களில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
39 மக்களவைத் தொகுதிகளோடு, விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
புதுச்சேரிக்கும் முதல்கட்டமாக, ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியாவில் 96.8 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம்: மார்க்சிஸ்ட் வேட்பாளர்களின் பின்னணி என்ன?