கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள் விழாவில், நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டதன் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் நடிகர் அஜித்திற்கு ஒரு சின்ன அறுவைசிகிச்சை நடந்தது. இதனால் கவலையில் இருந்த ரசிகர்களை குட் பேட் அக்லி அறிவிப்பினை வெளியிட்டு கூல் ஆக்கினார்.
என்றாலும் விடாமுயற்சி ஷூட்டிங் நீடித்துக்கொண்டே செல்வதால், அவரது ரசிகர்களுக்கு வருத்தம் இன்னும் தீர்ந்தபாடில்லை.
இதற்கிடையே விடாமுயற்சி ஷூட்டிங் ஏப்ரல் கடைசியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் அஜித் ஹைதராபாத்தில் நடந்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு, அவரை வாழ்த்தி கேக் ஊட்டி விட்டுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த பலரும் அஜித் திடீரென ஹைதராபாத்திற்கு சென்று, பிறந்தநாள் விழாவில் எப்படி கலந்து கொண்டார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போது அதற்கான காரணம் வெளியாகி இருக்கிறது. அதன்படி அஜித் ஹைதராபாத்திற்கு பிசியோதெரபி சிகிச்சைக்காக சென்றுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிசியோதெரபிஸ்ட் தான் அஜித்திற்கும் பிசியோதெரபிஸ்ட் ஆக இருக்கிறார்.
சிகிச்சை தொடர்பாக அஜித் சென்றபோது, அவருக்கு சன்ரைசர்ஸ் அணியினர் பிறந்தநாள் கொண்டாடத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இப்படித்தான் நடராஜன் பிறந்தநாள் விழாவில் அஜித் கலந்து கொண்டுள்ளார்.
பிறந்தநாள் விழாவில் அஜித் கலந்து கொண்டதால், நடராஜன் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்து வருகிறாராம். எதிர்பாராமல் கிடைத்த இந்த சர்ப்ரைஸ் அவரை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளதாக தெரிகிறது.
இதற்கு நடுவில் நாளை (ஏப்ரல் 5) ஹைதராபாத்தின் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. போட்டியை நேரில் காணுமாறு சென்னை-ஹைதராபாத் இரண்டு அணிகளுமே அஜித்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாம்.
அஜித் குடும்பமே சென்னை அணியின் ரசிகர்கள் என்பதால், நிச்சயம் இந்த போட்டியை அஜித் நேரில் கண்டுகளிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“சனாதனத்திற்கு எதிராக பேச முடியாது” : காங்கிரஸில் இருந்து விலகினார் கவுரவ் வல்லப்
Rishabh Pant: ரூ.24 லட்சம் அபராதத்துடன்… 1 போட்டியில் விளையாட தடை விதித்தது பிசிசிஐ
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்… அச்சத்தில் மக்கள்: வனத்துறை கண்காணிப்பு தீவிரம்!