நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் கேப்டன் மில்லர்.
இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகை பிரியங்கா மோகன், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர் சந்திப் கிஷன், நடிகை நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் ஜனவரி 3 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிவராஜ் குமார் பல யூடியூப் சேனல்களுக்கு தொடர்ந்து இன்டர்வியூகள் கொடுத்து வந்தார்.
அந்த இன்டர்வியூகளில் ஜெயிலர் குறித்தும், தனுஷ் குறித்தும் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஒரு பேட்டியில் பிரபல தொகுப்பாளர் கோபிநாத் உடன் உரையாடிய நடிகர் சிவராஜ் குமார்,
“ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் என்னை பாராட்டினார்கள். அந்த படத்தில் நான் அப்படி என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை.
என் மனைவியும் இதையே தான் என்னிடம் சொன்னார். என் தந்தை இப்போது இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார் என்று ரஜினி சார் சொன்னார். தமிழ் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி” என்று தெரிவித்திருந்தார்
அதேபோல் மற்றொரு பேட்டியில் பேசிய சிவராஜ் குமார்,
”தனுஷை திரையில் பார்க்க ப்ரூஸ் லீ போல் இருக்கிறார். அந்த ஸ்டைல் அவரிடம் உள்ளது. ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் முற்றிலும் மாறுபட்டவர். மிகவும் அன்பானவர்.
தனுஷுடன் எனக்கு ஒரு எமோஷனல் கனெக்ட் உள்ளது. தனுஷை பார்க்கும் போது என் தம்பி அப்புவை (புனீத் ராஜ்குமார்) பார்ப்பது போல் இருக்கிறது” என உணர்ச்சிப் பூர்வமாக கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு: எவ்வளவு தெரியுமா?
திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்: போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!