சாதிய வன்முறையால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னதுரை பிளஸ்2 தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி அம்பிகாபதி தம்பதியரின் மகனான சின்னதுரை அங்குள்ள அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாதி வெறியில் இருந்த சக மாணவர்கள், சின்ன துரையை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அதை தடுக்க முயன்ற சின்னத்துரையின் தங்கைக்கும் அரிவாள் விட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்கள் இருவரும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனையறிந்த சின்ன துரையின் தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
சாதி வெறியில் நிகழ்த்தப்பட்ட இந்த கொலைவெறி தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.
பிளஸ் தேர்வில் வெற்றி!
தொடர்ந்து பிளஸ் 2 படித்து வந்த சின்னதுரைக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மெலும் கைகள் வெட்டப்பட்டு தேர்வு எழுத முடியாமல் சிரமப்பட்டு வந்த சின்னத்திரை பிறர் உதவியோடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எழுதினார்.
அதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தேர்வையும் அவர் எழுதியிருக்கும் நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின.
அவர் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார்.
CA படிக்க ஆசைப்படுகிறேன்!
இதுதொடர்பாக செய்தியாளர்கள் இன்று சின்னதுரையிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், ”நான் ஆஸ்பத்திரியில் இருந்த போது பள்ளி ஆசிரியர்கள் எனக்கு நேரில் வந்து பாடமெடுத்தனர். அது எனக்கு உதவியாக இருந்தது. ஆசிரியர்கள் எனக்குத் தனி கவனம் செலுத்தினார்கள். அதனால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடிந்தது. B.Com படிப்பை முடித்து CA படிக்க ஆசைப்படுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வாழ்த்து!
இதற்கிடையே மாணவர் சின்னதுரையை தொடர்பு கொண்டு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்ததுடன் முன்னரே கூறியபடி, அவரது மேற்படிப்பை தொடர உதவுவேன் என்று உறுதியளித்துள்ளார்.
நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும்,…
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 6, 2024
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன்.” என அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
வெட்டியவர்களும், வெட்டுப்பட்டவரும் கையில் ஏந்தியது ஆயுதத்தைத் தான்!
அவர்கள் ஏந்தியது #அரிவாளை;#சின்னதுரை ஏந்தியது பேரையுதம் என்னும் #கல்வியை! pic.twitter.com/KAsfKv1wRd
— JCB.க.மோகன் (@MohanKArulz) May 6, 2024
இதனையடுத்து சாதி வெறியர்களுக்கு தாக்குதலை எதிர்த்து போராடி வெற்றி கண்ட சின்னதுரை, தற்போது பிளஸ்2 தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதாக பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜெயக்குமார் தனசிங் கொலை…போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்… வெளிவராத விசாரணைத் தகவல்கள்!
மணல் குவாரி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
சின்னதுரைக்கு வாழ்த்துகள். தம்பி சிஏ படிக்க ஆசைப்படுறாரு. நல்லது. இப்பயாச்சும் நேரடியாக அரிவாளை எதிர்க்கொண்டு ஜெயிச்சுட்டீங்க. ஆனா அங்கெ, வஞ்சகம், சூழ்ச்சி போன்ற மறைமுக ஆயுதங்களால் கண்டிப்பாகத் தாக்க தயாரா இருப்பாய்ங்க. அதுக்கும் சூதானமா இருந்துகிடுங்க.