’இனிமேல்’ மியூசிக் வீடியோ: கமல் – ஸ்ருதி கியூட் உரையாடல்!

நடிகர் கமல் ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஸ்ருதிஹாசன், அதன்பிறகு நடிகர் சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாகவும் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்த ஸ்ருதி ஹாசன் தற்போது பெரிதாக நடிப்பில் கவனம் செலுத்துவதில்லை.

இசை மீது அதிக ஆர்வம் உள்ள ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் இனிமேல் என்ற மியூசிக் வீடியோவை இசையமைத்து நடித்து வெளியிட்டார். அந்த பாடலுக்கு உலக நாயகன் கமல் ஹாசன் வரிகள் எழுதி இருந்தார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ள லோகேஷ் கனகராஜை, இனிமேல் மியூசிக் வீடியோவின் மூலம் நடிகராக அறிமுகம் செய்தார் ஸ்ருதி ஹாசன்.

இனிமேல் மியூசிக் வீடியோவில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு அந்த பாடலை சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.

இந்நிலையில், தற்போது இனிமேல் மியூசிக் வீடியோவின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் நடிகை ஸ்ருதிஹாசனும் அந்த பாடல் உருவாக்கத்தை குறித்து உரையாடும் 20 நிமிட வீடியோ இன்று (ஏப்ரல் 27) வெளியாகி இருக்கிறது.

“Legacy of Love” என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில், இனிமேல் பாடல் உருவாக்கம் குறித்தும், குடும்ப உறவுகள் குறித்தும், தங்களது வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் பல சுவாரசியமான விஷயங்களை கமல் – ஸ்ருதி இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் “கூலி” (தலைவர் 171) திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழகத்தில் வெப்ப அலை… வானிலை மையம் அலர்ட்!

கோடை குடிநீர் தட்டுப்பாடு: ரூ.150 கோடி ஒதுக்கீடு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts