கர்நாடகா முதல்வர் அறிவிப்பு எப்போது? ரன்தீப் சுர்ஜேவாலா தகவல்!

அரசியல் இந்தியா

கர்நாடகா முதல்வர் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கு காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மே 13-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானாலும் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இருவரும் டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினரும் கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா, “கர்நாடகா அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்று அல்லது நாளை கர்நாடகா முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

LSG vs MI: தந்தைக்கு வெற்றியை சமர்ப்பித்த மகன்!

“ரசிகர்களை தள்ளி விடாதீர்கள்”: ராஷ்மிகா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *