தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ்க்கு தர்ம அடி கொடுத்த சென்னை கிங்ஸ்!

விளையாட்டு

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.

சென்னை அணியை சில நாட்களுக்கு முன்னதாக அதன் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.  அந்த தெம்புடன் தனது சொந்த மைதானமான தர்மசாலாவில் சென்னை அணியை இன்று (மே 5) எதிர்கொண்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா பொறுப்புடன் விளையாடி 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் ருதுராஜ் 32 ரன்களும், டேரில் மிட்செல் 30 ரன்களும் குவித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே மற்றும் தோனி ஆகியோர் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் ராகுல் சாஹர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துஷார் தேஷ்பாண்டே அதிர்ச்சி அளித்தார்.

ஆட்டத்தின் 2வது ஓவரை வீசிய அவர், தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோ(7) மற்றும் ரோஸ்சோவை(0) கிளீன் போல்டாக்கினார்.

Image

எனினும் 3வது விக்கெட்டுக்கு இணைந்த பிரப்சிம்ரன் சிங்(30) மற்றும் சஷாங்க் சிங்(27) அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.

எனினும் அவர்கள் இருவரின் விக்கெட்டையும் சாண்ட்னர் மற்றும் ஜடேஜா கைப்பற்றினர்.

தொடர்ந்து வந்த பஞ்சாப் அணி வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வந்த வேகத்தில் வெளியேறினர்.

இதனால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 139 ரன்களை மட்டுமே குவித்தது.

இதனால் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சிமர்ஜீத் சிங் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மேலும் இந்த வெற்றியுடன் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நடிகர் ராமராஜன் வீட்டில் நடந்த சோகம்!

”பெண் காவலர்கள் குறித்து பேசியதை சவுக்கு சங்கர் தவிர்த்திருக்கலாம்” – சீமான்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *