அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை நாளை (ஜூலை 6) நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிக்க உள்ளார்.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பைபாஸ் சர்ஜரிக்கு பின் காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்.
இதனிடையே செந்தில் பாலாஜி மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.
இதனால் வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக சிவி கார்த்திகேயனை தலைமை நீதிபதி கங்காபூர்வாலா இன்று நியமித்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு நாளை பிற்பகல் 2.15 மணியளவில் சிவி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வரவுள்ளது.
பிரியா
செந்தில் பாலாஜி வழக்கு… மூன்றாவது நீதிபதி : யார் இந்த சி.வி.கார்த்திகேயன்?
வேங்கைவயல் கொடுமை: டி.என்.ஏ பரிசோதனைக்கு 8 பேர் ஆஜர்!