அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயனை மூன்றாவது நீதிபதியாக நியமனம் செய்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா இன்று (ஜூலை 5) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆட்கொணர்வு வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. செந்தில் பாலாஜி வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படும் நிலையில் வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிக்க உள்ளார்.
யார் இந்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன்?
1964ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி வழக்கறிஞர்கள், நீதிபதிகள் நிறைந்த குடும்பத்தில் 6 ஆவது தலைமுறையில் பிறந்தவர் சி.வி.கார்த்திகேயன். சி.வி.சிம்மராஜ சாஸ்திரி மற்றும் எஸ். சரஸ்வதி தம்பதியினரின் மகன்.
சென்னை, ராயபுரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பிரசன்டேஷன் கான்வென்ட்டில் ஆரம்பப் பள்ளிப் படிப்பையும், சென்னை ஆர்மேனியன் தெருவில் உள்ள செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை கல்வியையும் படித்தார்.
திருவல்லிக்கேணியில் உள்ள இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் உயர்நிலை படிப்பையும் முடித்தார். தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் இளங்கலை புள்ளியியல் பிரிவில் பட்டம் பெற்றார்.
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற சி.வி.கார்த்திகேயன் பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.
கடந்த 1989 ஆகஸ்ட் 23ல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.
சென்னை சட்டக் கல்லூரியின் பகுதி நேரப் பேராசிரியரான மறைந்த வி.எஸ் சுப்பிரமணியன் அலுவலகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.
பின்னர் 2005ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி ராமநாதபுர மாவட்டத்தில் மாவட்ட பயிற்சி நீதிபதியாக பணியில் சேர்ந்தார். மதுரையில் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக சிபிஐ வழக்குகளை கையாண்டார்.
வேலூரில் உள்ள கூடுதல் மற்றும் முதன்மை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி, தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியின் இயக்குநர், சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் (விஜிலென்ஸ்) என படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
சி.வி.கார்த்திகேயன் விசாரித்த வழக்குகள்
சவுக்கு சங்கர் வழக்கு
2022ஆம் ஆண்டு ஜி ஸ்கொயர்’ ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்தார்.
விஜயபாஸ்கர் வழக்கு
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் விஜயபாஸ்கர் வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், அனிதா ராதாகிருஷ்ணனின் மனுவை ஏற்று இவ்வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு 2022 ஜூலை 14ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது வைத்தியநாதன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு தடையை நீட்டித்தது. பின் நாளில் அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு இந்த தடையை நீக்கியது.
முன்னாள் ஐஜிக்கு எதிரான வழக்கு!
பாஸி நிதி நிறுவனத்துக்கு எதிரான மோசடி வழக்கையும், நிதிநிறுவன பெண் இயக்குனரிடம் 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அப்போதைய ஐஜி பிரமோத்குமார் உள்ளிட்ட போலீசார் மீதான வழக்கையும் சிபிஐக்கு மாற்றியது சரி என கடந்த நவம்பர் 2021ல் உத்தரவிட்டார் சி.வி.கார்த்திகேயன்.
ஜெயலலிதா வழக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களை பராமரிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகி புகழேந்தி மற்றும் ஜானகிராமன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.
அதிமுக பேனர் விழுந்து சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கு, யூடியூபர் மாரிதாஸ் மீதான அவதூறு வழக்கு, நீட் தேர்வில் ஓ எம்.ஆர்.குளறுபடி உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார் சி.வி.கார்த்திகேயன்.
செந்தில்பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஹேபியஸ் கார்ப்பஸ் வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்துள்ள நிலையில்… மூன்றாவது நீதிபதியான சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப் போகிறது.
பிரியா
செந்தில் பாலாஜி வழக்கில் இரு மாறுபட்ட தீர்ப்பு!
வேங்கைவயல் கொடுமை: டி.என்.ஏ பரிசோதனைக்கு 8 பேர் ஆஜர்!
அப்ப சரி…🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நான் அதிகம் கொடுத்த 10 ரூவாய்க்கு கடவுள் கண் தொறந்திட்டான்..
சாஸ்தரா பல்கலைக்கழக நில அபகரிப்பு வழக்கு
இரண்டு நீதிபதி அமர்வில் ஒரு நீதிபதி சாஸ்திரா பல்கலைகழக ஆதரவாக மாற்று இடம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கை கைவிட சொன்னது
மற்றொரு நீதிபதி இது குற்றச்செயல் இடத்தை காலி செய்து மாற்று இடத்திற்கு பல்கலை கழகத்தை மாற்ற வேண்டும் என்றார்
மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு மாற்றி அங்கேயும் இவர் தான் மூன்றாவது நீதிபதி
அவர் சொன்ன நீதிபதி சாஸ்திரா பல்கலைகழகம் தவறு செய்ததாக என்ற இரண்டாவது நீதிபதியின் முடிவை ஏற்கிறேன்
அத்தோடு இவ்வளவு நாள் அரசு நிலத்தை அபகரித்து இருந்ததால் அதற்கான வாடகையை அரசு நிர்ணய படி செலுத்திவிட்டு இடத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டார்