திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் மே 20-ஆம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் மே 20-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.
இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
”எடப்பாடி ஒரு சண்டிக்குதிரை”: வைத்திலிங்கம் பதிலடி!
+1
+1
+1
+1
+1
+1
+1