மாமியாருக்கு தாலி கட்டிய மருமகன்: பீகாரில் நடந்த விநோதம்!

இந்தியா

மாமியாருக்கு மருமகனே தாலி கட்டிய சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த கீதா தேவி (55) – திலேஷ்வர் தர்வே (60) தம்பதியின் மகளை சிக்கந்தர் யாதவ் (40) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் சிக்கந்தர் யாதவின் மனைவி உடல்நலக் குறைவால் காலமானார். அதனால் தனது மாமியார் வீட்டுக்கு தனது இரண்டு குழந்தைகளுடன் சிக்கந்தர் யாதவ் குடிபெயர்ந்தார். இந்த நிலையில் மாமியாருக்கும், மருமகனுக்கும் தொடர்பு ஏற்பட்டு பல நேரங்களில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கணவன் – மனைவியாக இருந்துள்ளனர்.

இந்த விவகாரம் கணவர் திலேஷ்வர் தர்வேவுக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், இந்த விவகாரத்தை கிராம பஞ்சாயத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அவர்கள் மாமியாரையும், மருமகனையும் நேரில் அழைத்து விசாரித்தனர். இருவரும் தங்களுக்குள் இருக்கும் தொடர்பை ஒப்புக் கொண்டனர்.

பின்னர் இருவரும் திலேஷ்வர் தர்வேவின் சம்மதத்தின் பேரில், கிராமத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மாமியாரை மருமகனே திருமணம் செய்து கொண்ட இந்த சம்பவம், பீகாரில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

மே தினத்தில் மகிழ்ச்சி செய்தி… சிலிண்டர் விலை குறைந்தது!

ஈரானின் இஸ்ரேலியத் தாக்குதல் அமெரிக்காவின் சூயஸ் தருணமா?

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : தஹி பிரெட் டிக்கி

+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *