போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து இன்று (மே 1) டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதையடுத்து, ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் 5 பேருக்கு எதிராக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தவும், வாக்குமூலம் பதிவு செய்யவும் அனுமதிக்கக்கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது.
திகார் சிறைக்குச் சென்று 5 பேரிடமும் 3 நாட்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறைக்குள் லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை எடுத்துச் செல்லவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று (மே 1) ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடமும் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
AK Birthday : சர்ப்ரைஸ் செய்த ஷாலினி.. ரீ ரிலீஸை கொண்டாடும் ரசிகர்கள்!
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் : துரைமுருகன்