தமிழக முன்னாள் டிஜிபி கருணா சாகர் இன்று (மே 01) காங்கிரஸில் இணைந்தார்.
பீகார் தலைநகர் பாட்னாவை சேர்ந்த கருணா சாகர், அங்குள்ள லயோலா பள்ளியில் ஆரம்பக்கல்வியை முடித்தார். அதன்பிறகு டெல்லி சென்று முதுகலை பட்டம் பெற்ற கருணா சாகர், கல்லூரிகளில் விரிவுரையாளராக பணியாற்றினார்.
பிறகு யுபிஎஸ்சி தேர்வு எழுதிய அவர் 1991 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆனார்.
1994 ஆம் ஆண்டு கும்பகோணம் ஏஎஸ்பியாக பணியை தொடங்கி தமிழ்நாடு காவல்துறையில் உயரிய பதவியான டிஜிபி உட்பட பல்வேறு பதவிகளிலும், பணியாற்றி இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கீழ் வரும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
32 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் பணியாற்றிய இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
கருணா சாகருக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இதில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இணைந்தார். அதன்பின்னர், அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் தனது மனைவி அன்சுவுடன் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் மோகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார் கருணா சாகர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து – உரிமையாளர்கள் 2 பேர் கைது!
EVM-VVPAT வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது! – அசோக் வர்தன் ஷெட்டி