ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பிரதமர் மோடி புனித நீராடினார்.
3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி சென்னை, ஸ்ரீரங்கம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்று (ஜனவரி 20) மதியம் ராமேஸ்வரத்துக்கு வருகைத் தந்தார்.
ஸ்ரீரங்கத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் ஹெலிபேடு தளத்துக்கு வந்தார்.
அங்கிருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடிக்கு சாலையில் இருபுறமும் நின்றிருந்த பாஜகவினர், பொதுமக்கள் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராமநாதசுவாமி கோயில் அமைந்துள்ள வடக்கு வீதியில் இருக்கும் ராமகிருஷ்ண மடத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு 10 நிமிடம் ஓய்வெடுத்தார். பின்னர் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்து அக்னி தீர்த்த கடலில் நீராடினார்.
இதன்பிறகு பேட்டரி கார் மூலம் கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்குள் வந்த அவர். ருத்ராட்ச மாலை அணிந்தபடி சாமி தரிசனம் செய்தார். ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி வருகிறார்.
இன்று இரவு 7.15 வரை கோயிலில் நடைபெறும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.
ராமேஸ்வரத்தில் இருந்து புனித நீரை அயோத்தி ராமர் கோயிலுக்கு மோடி எடுத்து செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ராமர் கோவில் விழாவிற்கு விடுமுறை வேண்டும்: வானதி சீனிவாசன்