போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காணாமல் போனதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று (மே 1) வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2௦18 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 70,772 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டு தற்போது காணாமல் போனதாக கூறப்படும் ஹெராயின் போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாகும்.
ரூ5 லட்சம் கோடி மதிப்பிலான 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் காணவில்லை என்று பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இப்போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 2018-ல் சிக்கிமில் 15,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில் 2018-ம் ஆண்டு மொத்தம் 19,691.155 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த மனுவில் கூறப்பட்டு இருக்கிறது. இப்படி 2018-2020ம் ஆண்டு காலத்தில் மட்டும் 70,000 கிலோ போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்படி காணாமல் போன ஹெராயின் போதைப் பொருள் எங்கே போனது? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் தொடர்ந்த வழக்கில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் தொடர்ந்த வழக்கு இன்று (மே 1) நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்த பிறகு கிடங்கில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருளின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடி என சுட்டிக்காட்டப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், 4 வாரங்களில் நிதி அமைச்சகம், உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி!
டிவி நிகழ்ச்சியில் வடிவேலு… ஒரு எபிசோடுக்கு கோடியில் சம்பளமா?
Comments are closed.