காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (மே 1) தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற மே தின கொண்டாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஒரு காலத்தில் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் வித்தியாசம் இல்லாமல், இரவு, பகல் என்று பாராது எப்போதும் வேலை வாங்கும் ஒரு கொடுமையான நிலை இருந்து வந்தது. அப்படி இருந்த தொழிலாளர்கள் உரிமையை பெற்ற நாள் இன்று.
திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்ப காலத்தில் இருந்தே தொழிலாளர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டது. தொழிலாளர்களின் வளர்ச்சியோடு ஒன்றி வளர்ந்த இயக்கம் திமுக.
திமுகவின் தொழிற்சங்க பிரிவு தொழிலாளர்களின் வர்க்கத்திற்காக நீண்டநெடுகாலம் போராடி, பல்வேறு தியாகங்களை செய்து பல வெற்றிகளை பெற்று இருக்கிறது.
அப்படி உழைக்கும் தொழிலாளர்களுக்காக ஒரு நினைவு சின்னம் வைக்கவேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, கலைஞர் முதலமைச்சராக இருந்தார். நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தேன்.
கலைஞர் எனக்கு உத்தரவிட்டார். அதன்படி 3 நாட்களில் மெரினா கடற்கரையில் தற்போது வைக்கப்பட்டுள்ள தொழிலாளர் சிலையை நாங்கள் உருவாக்கி காட்டினோம்.
கர்நாடக அரசு எப்போதும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறோம் என்று சொல்லியது இல்லை. அங்கு அதிகமாக தண்ணீர் இருந்தாலும் அவர்கள் தண்ணீர் திறந்து விட மாட்டார்கள். காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டும் தற்போது வரை திறக்கவில்லை.
மத்திய அரசை கர்நாடக அரசு அவமரியாதை செய்கிறது. இதனை கேள்வி கேட்க வேண்டியது உச்சநீதிமன்றம். அதனால் காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம்” என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
T20 WorldCup : 15 பேருமே கில்லி தான்… அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா
மே தினம் : தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!
Gold Rate : தங்கம் விலை வீழ்ச்சி… பெண்கள் மகிழ்ச்சி!