பத்தவச்சிட்டியே பரட்ட: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு ஜூஸ் கடைக்கு போயிருந்தேன்…

அடிக்குற வெயிலுக்கு ஆளுக்கு ஒரு லெமன் ஜூஸ் ஆர்டர் பண்ணோம்.

அப்போம் நண்பர் மொபைல பார்த்து சிரிச்சிக்கிட்டு இருந்தாரு… என்ன நண்பான்னு கேட்டதும், ”தீனா ரீ ரிலிஸ்-ல அஜித் ரசிகர்கள் தியேட்டருக்குள்ள பட்டாசு வெடிச்சிருக்காங்கன்னு” வீடியோவ காட்னாப்ல…

”அதுவும் வத்திக்குச்சி பத்திக்காதுடா பாட்டு போட்ட உடனே நம்ம பசங்க பட்டாச பத்த வச்சிருக்காங்கன்னு” சொன்னாரு

அதுக்கு நான், “அதே பாட்டுல, மனச இரும்பாக்கனும்… மலையை துரும்பாக்கனும்… ஆழ்கடல் கூடதான் ஆறு போல மாறுமடான்னு அஜித் மோட்டிவேஷன் சொல்லியிருப்பாரு… அதையெல்லாம் விட்டுட்டு பத்த வைக்கிறதுலேயே குறியா இருக்காங்களேன்னு” சொன்னேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
உழைப்பவன் வியர்வை காயும் முன் அவனின் மாதாந்திர
EMI யை எடுத்துவிடு

Kirachand
தென்னிந்தியாவில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு! – அமித்ஷா
அதைத்தான் ‘ரோடு ஷோ’ல பார்த்தோம்ல…

குருநாதா
அதான் காப்பி ரைட்ஸ் வாங்கியாச்சே
வாய்ஸ் இல்லாம மியூசிக் மட்டும் வருது?
வைரமுத்துகிட்டயும் வாங்கனுமாம்

ℳsd இதயவன்
இந்திய மக்களுக்கு இந்த தேர்தல் வாழ்வா? சாவா? பிரச்னை ~ செல்வப்பெருந்தகை
ஆமாமா காங்கிரஸ்க்கு தான் சாவா வாழ்வா பிரச்சினை?!

ச ப் பா ணி
கூகுள் வாய்ஸ் டைப்பிங்:
*சீரும் சிறப்புமாக
*சேலம் செருப்புமாக

கடைநிலை ஊழியன்
டு சூரியன் –
கடந்த ரெண்டு, மூணு மாசமா எங்கள விட, நீங்க தான் ஓவர் டைம் ‘ல உழைக்கிறீங்க.. உங்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..

????????????????????????????
நம்மை பற்றி புறம் பேசுபவர்களுக்கு தேவையானது உண்மை அல்ல.
சுவாரஸ்யமாக பேசுவதற்கு ஒரு தலைப்பு. அவ்வளவே!!!

செங்காந்தள்
ஒவ்வொரு வருடமும் ரீரீலீஸ் ஆகி விடுகிறது அக்னி நட்சத்திரம்…!!!

அன்னையின் பிள்ளை
மாத சம்பளம் வாங்கும் சாமானியனின் வாழ்க்கை எளிதில் கடக்க முடியாத மாதம் ஏப்ரல் மாதம் தான்..!
-ஸ்கூல்பீஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

வாக்கு சதவீதத்தை வெளியிட 11 நாட்கள் ஆனது ஏன்? சதவீதம் இருக்கிறது…எண்ணிக்கை எங்கே? தேர்தல் ஆணையம் பதிலளிக்குமா?

காங்கிரஸில் இணைந்த தமிழக முன்னாள் டிஜிபி கருணா சாகர்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share