பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகை ஏற்கெனவே ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு இன்று (அக்டோபர் 4) உத்தரவிட்டுள்ளது.
வருமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் மூலம் சுமார் 9.6 கோடி குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக வீட்டு உயபோக சிலிண்டர் விலை ரூ.1,118.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 200 ரூபாயை குறைத்த நிலையில், தற்போஹு ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மேலும் 100 ரூபாய் குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அனுராக் தாக்கூர் இன்று தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
இதன்மூலம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான மானிய தொகை ரூ.300 உயர்ந்துள்ளது.
அதன்படி, 14.2 கிலோ கிலோ எடையுடைய வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு இனி மாதம் மொத்தம் 300 ரூபாய் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், இந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 203 உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த மாதம் சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.1,899க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா என ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக வெளிவந்துள்ளது கவனிக்கத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஐசிசி உலகக்கோப்பை திருவிழா: பரிசுத்தொகை எவ்வளவு?
சாதிவாரி கணக்கெடுப்பு – அரசுக்கு உத்தரவிட முடியாது : உயர் நீதிமன்றம்!
மன்னிப்பு கேட்பதற்காகவே ஒரு பொதுக்கூட்டம்: அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Comments are closed.