Caste wise census case

சாதிவாரி கணக்கெடுப்பு – அரசுக்கு உத்தரவிட முடியாது : உயர் நீதிமன்றம்!

தமிழகம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 4) தெரிவித்துள்ளது.

பீகாரில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பேச்சுகள் அதிகரித்திருக்கிறது.

தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தமிழ் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ் நாடு சட்ட பாதுகாப்பு இயக்கம் சார்பில் முனியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், “சாதிக் குழுக்களைச் சேர்ந்த மக்கள்தொகையின் சரியான சதவீதத்தைக் கண்டறியச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தமிழக அரசிடம் மனு கொடுத்தேன்.

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

தமிழ்நாட்டில் 3000 க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில்,

வறுமைக் கோட்டுக்குக் கீழ் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் அரசின் வேலைவாய்ப்புகள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்படும்.

எனவே எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனுவை இன்று (அக்டோபர் 4) விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி,

“எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது எனவே இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று மறுப்புத் தெரிவித்தனர்.

மீண்டும் அரசை அணுக வலியுறுத்திய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

பிரியா

“ரவி தேஜா”வின் பான் இந்தியா படம்; டிரெய்லர் ரிலீஸ்!

ஐசிசி உலகக்கோப்பை திருவிழா: பரிசுத்தொகை எவ்வளவு?

மன்னிப்பு கேட்பதற்காகவே ஒரு பொதுக்கூட்டம்: அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *