ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடர் நாளை (அக்டோபர் 5) தொடங்க உள்ள நிலையில் சமூகவலைதளங்கள் முழுவதும் கிரிக்கெட் செய்திகளே ஆக்கிரமித்துள்ளன.
12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரை சோலோவாக தலைமையேற்று இந்தியா நடத்துகிறது.
சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் நடைபெறும் போட்டிகளில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த தொடரில் 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதி மற்றும் ஒரு இறுதிப்போட்டி என மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.
ஐசிசி வழங்கும் பரிசுத்தொகை:
கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டது.
இந்த வருடமும் அதே தொகையை தான் பரிசுத்தொகையாக அறிவித்துள்ளது ஐசிசி. அதாவது 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகை இந்திய மதிப்பில் சுமார் 83 கோடியே 25 லட்ச ரூபாய் ஆகும்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
இதில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 33.28 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
இறுதிப்போட்டியில் தோல்வியுறும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16.64 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 6.65 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறாத 6 அணிகளுக்கு தலா 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 83.21 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும்
லீக் சுற்றில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு 40 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 33.28 லட்ச ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
ஐசிசி நடத்தும் மிகப்பெரும் பரிசுத்தொகை கொண்ட கிரிக்கெட் திருவிழாவாக 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் கருதப்படுகிறது. இதற்கான வேட்டை நாளை முதல் தொடங்குகிறது.
குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் நாளை மதியம் 1 மணிக்கு தொடங்க இருக்கும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
கிறிஸ்டோபர் ஜெமா
LEO Trailer: டைரக்டரின் ட்வீட்… எகிறும் HYPE!
Asian Games 2023: இந்தியா புதிய சாதனை!