ரயில் விபத்தில் சிக்கி 275 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என ஒடிசா மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (ஜூன் 4) வெளியிட்டுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு 3 ரயில்கள் மோதி நாட்டையே உலுக்கும் அளவிற்கு கோர விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு தொடர்ந்து தீயணைப்பு துறையினர், மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அந்த பகுதியில் விபத்தில் சிக்கி நொறுங்கிய பெட்டிகள் அகற்றப்பட்டு தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 275 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அம்மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்த 275 பேரில் 88 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சில சடலங்கள் 2 முறை எண்ணப்பட்டதே எண்ணிக்கை அதிகமாக கூறியதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த 1,175 பேரில் தற்போது வரை 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜூன் 7ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறும்: திமுக
ஒடிசா ரயில் விபத்து: தகவல் கிடைக்காத 8 தமிழர்களின் நிலை என்ன?