தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் வெப்ப அலை மற்றும் வெப்பச்சலன மழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் இன்று (மே 3) வெளியிட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நேற்று 17 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக கரூரில் 112 டிகிரியும், ஈரோட்டில் 111 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும் பதிவானது.
இந்நிலையில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. 5ம் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்பத்தின் அளவு இயல்பைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது, வட தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
இந்த நிலையில் இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் இன்றும் வெப்ப அலை தொடரும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கையும், 5 நாட்களுக்கு வெப்பச்சலனத்தால் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மேற்குவங்கம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி… பிரியங்கா காந்திக்கு நோ சீட்!
முரண்டு பிடிக்கும் இயக்குநர்… கைவிட்ட அமேசான் பிரைம் : நெருக்கடியில் சௌந்தர்யா ரஜினிகாந்த்