மொழிகளைக் கடந்த மொழியை கௌரவிப்போம்: உலக சைகை தினம்!

இந்தியா

மொழிகளைக் கடந்த ஒரு மொழி என்னவென்றால் அது சைகை.

மனிதன் மொழியை கண்டுபிடிக்காத காலத்தில் கருத்துகளை கடத்த உதவிய கருவி சைகைதான்.

அதேநேரம் மொழியிலும் மொழியியலிலும் நாம் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துவிட்டபோதிலும் சைகைக்கு உண்டான மதிப்பு இன்னும் குறையவில்லை.

மொழியை உச்சரித்து குரல் எழுப்பி சத்தம் ஏற்படுத்திவிடாமல் சைகையால் ஒரு கருத்தை நாம் பரிமாறிக்  கொள்ள முடிகிறது.  

காது கேளாத,  வாய் பேச இயலாதோர்க்கு வாழ்வு முழுதுமே சைகை மொழி முக்கியமானதாகிவிட்டது.
 
இந்த நிலையில்  சைகை மொழி தினம் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில்,

இன்று (செப்டம்பர் 23) புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் அமைந்துள்ள  சி டி தேஷ்முக் ஆடிடோரியத்தில்  கொண்டாடப்பட உள்ளது.

சர்வதேச சைகை மொழி தினமாக செப்டம்பர் 23 அன்று கொண்டாடப்படும் என்று ஐநா அறிவித்ததிலிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 23ம் தேதியை இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் கொண்டாடுகிறது.

விடுதலை பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு சைகை மொழி தினம் மத்திய சமூகநீதிமன்றம் அதிகாரமளித்தல்  அமைச்சகம் மூலம் கொண்டாடுவதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

காது கேளாதோருக்கு தகவல்களை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சைகை மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

சமூகத்தில் காது கேளாதவர், வாய் பேச முடியாதவர்களுக்கான உரிமையை கௌரவத்தை நிலைநாட்டுவோம்.

வேந்தன்

சுவாதி கொலை: பெற்றோர் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

வாரிசு’ சாதனையை முறியடித்த ’துணிவு’!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *