’என் வாழ்க்கை வரலாறு படத்தின் ஹீரோ…’ : யுவராஜ் சிங் ஆசை நிறைவேறுமா?

சினிமா விளையாட்டு

கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைத்த பல இந்திய வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது.

உதாரணத்திற்கு மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான எம். எஸ். தோனி The Untold Story, சச்சின் டெண்டுல்கரின் சச்சின் : A Billion Dream, முகமது அசாருதீன் அசார், கபில்தேவ் தலைமையில் 1983 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை மையமாகக் கொண்டு வெளியான 83 என பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதே போல் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிடம், ’உங்களது வாழ்க்கை வரலாறு படத்தில் யார் கதாநாயகனாக நடிக்க பொருத்தமாக இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குஅவர், “சமீபத்தில் நான் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் பார்த்தேன். அதில் அவர் பிரமாதமாக நடித்திருந்தார் எனது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால், திரையில் என்னை பிரதிபலிக்க ரன்பீர் கபூர் பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கின்றேன்.

ஆனால் அந்த முடிவு இயக்குனரை பொறுத்தது. வாழ்க்கை வரலாறு படம் குறித்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அது குறித்து செய்தி அளிப்பேன் என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டில் நுரையீரலில் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டு பல மாதங்களாக லண்டனில் சிகிச்சை பெற்று வந்த யுவராஜ் சிங், அதன்பிறகு குணமடைந்து சில மாதங்களாக சிறப்பாக கிரிக்கெட் விளையாடி, கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

ரிப்பீட் சூப்பர் ஓவரில் இந்தியா ’த்ரில்’ வெற்றி பெற்றது எப்படி? : ரோகித் விளக்கம்!

சீனாவில் சரிந்த மக்கள் தொகை: காரணம் என்ன?

பியூட்டி டிப்ஸ்: கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்பவரா நீங்கள்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *