திருமணமாகி கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு அடுத்தடுத்து பூச்சூடல், சீமந்தம் என்று சுப நிகழ்ச்சிகள் தொடரும். இந்த நிலையில் ஒன்றிரண்டு நரை முடி உள்ளவர்கள், தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹேர் கலரிங் செய்து கொள்வார்கள். இது சரியா? அழகுக்கலை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
“கர்ப்ப காலத்தில் ஹேர் கலரிங் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஹேர் கலரிங் செய்வதை முற்றிலும் தவிர்ப்பதே பாதுகாப்பானது.
குறிப்பாக கெமிக்கல் கலந்த ஹேர் கலர்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கருவில் உள்ள குழந்தையின் உறுப்புகள் அந்த முதல் மூன்று மாதங்களில்தான் வளரத் தொடங்கும். தவிர்க்க முடியாத நிலையில் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
அவசியம் ஹேர் கலர் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில், கர்ப்பிணிகள் அமோனியா கலக்காத ஹேர் கலர் மற்றும் டையை தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். அது ஓரளவு பாதுகாப்பானதாக இருக்கும்.
அதேபோல கெமிக்கலே கலக்காத வெஜிடபிள் ஹேர் கலர்களை உபயோகிப்பதும் சிறந்தது. உதாரணத்துக்கு, ஹென்னா உபயோகிக்கலாம். அது கெமிக்கல் ஹேர் டைக்கு சிறந்த மாற்றாக இருக்கும்.
ஹேர் கலர் அல்லது டை உபயோகிக்கும்போது கூடியவரையில் அது முடியின் வேர்க்கால்களில் படாதபடி தடவவும். அதன் மூலம் அநாவசிய கெமிக்கல் உட்கிரகிப்பைத் தவிர்க்க முடியும். அதாவது இப்படி உபயோகிக்கும்போது ஹேர் கலரில் உள்ள கெமிக்கலானது முடிக்கற்றைகளோடு நின்றுவிடும்.
மண்டைப் பகுதியில்பட்டு ரத்தத்துடன் கலப்பதையும் தவிர்க்கலாம். இந்த முறையைப் பின்பற்றினால் ஹேர் கலரால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தாயும் கருவிலுள்ள குழந்தையும் பாதுகாக்கப்படுவார்கள்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : சேமியா பக்கோடா
மாடுபிடி வீரர்களுக்கு உதவித்தொகை: எடப்பாடி, டிடிவி வலியுறுத்தல்!
அண்ணே…அதாண்ணே இது: அப்டேட் குமாரு