is anirudh copy the ordinary person song from otnicka?

லியோ பாடல் காப்பியா? மீண்டும் சர்ச்சையில் அனிருத்

சினிமா

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ படம் பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. லியோ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவால் திரையரங்கங்கள் ஹவுஸ்புல்லாக உள்ளது.

லியோ படத்தின் மிகப்பெரிய பக்க பலமாக இருந்தது இசையமைப்பாளர் அனிருத்தின் இசை தான் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நா ரெடி, BADASS, அன்பெனும் போன்ற பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஆனால் படம் வெளியான பின் படத்தின் ஆரம்பக் காட்சியில் வரும் Ordinary Person என்ற பாடல் ரசிகர்களின் ஃபேவைரட் ஆகிவிட்டது.

இந்தப் பாடலை யூட்யூபில் வெளியிட ரசிகர்கள் தொடர்ந்து வேண்டுகோள் வைத்ததன் காரணமாக அக்டோபர் 23ஆம் தேதி இரவு 10 மணிக்கு Ordinary Person பாடல் யூட்யூபில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த பாடல் பல்கேரிய நாட்டை சேர்ந்த ஓட்னிக்கா என்ற இசை கலைஞரின் “வேர் ஆர் யு” என்ற பாடலின் காப்பி என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அந்த “வேர் ஆர் யு” என்ற பாடல் உலக புகழ் பெற்ற Peaky Blinders வெப் சீரிஸுக்காக உருவாக்கப்பட்ட பாடல்.

Otnicka - Where Are You - YouTube

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

இது குறித்து இசை கலைஞர் ஓட்னிக்காவின் சமூக வலைத்தள பக்கத்தை டேக் செய்து ரசிகர்கள் அனிருத் மேல் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து இசைக்கலைஞர் ஓட்னிக்கா கூறியதாவது,

“லியோ படத்தை பற்றி நூற்றுக்கணக்கான மெசேஜ்கள் எனக்கு வந்துள்ளது. நான் அனைத்தையும் பார்க்கின்றேன். இருப்பினும் அனைத்திற்கும் பதில் அளிக்க முடியாது.

வேர் ஆர் யு பாடல் வீடியோவிற்கு கீழ் எக்கச்சக்கமான கமெண்ட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. நிலைமை தெளிவாக இல்லை.

இது குறித்து ஆலோசித்த பின் என் கருத்தை கூறுகிறேன். ஆனால் நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை.” என்று கூறியுள்ளார்.

Image

இசையமைப்பாளர் அனிருத் மீது ஏற்கெனவே பாடல் காப்பி குற்றச்சாட்டு உள்ள நிலையில், கோலமாவு கோகிலா படத்திற்காக அனிருத் இசையமைத்த “எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சிடி” என்ற பாடல் சர்ச்சையில் சிக்கி யூட்யூபில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் ராஜா

பாகிஸ்தான் விமான நிறுவனத்தை விற்க முடிவு!

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்… ஆளுநர் காழ்ப்புணர்ச்சி: மார்க்சிஸ்ட்  குற்றச்சாட்டு!

+1
0
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *