மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்று (ஏப்ரல் 27) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி தேசிய பேரிடர் நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 2023 டிசம்பர் மாதத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.397 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்திற்கு முதல் கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் நிதியிலிருந்து ரூ.115.45 கோடியும், ரூ.397 கோடி வெள்ள பாதிப்பு நிதியில் இருந்து ரூ.160.61 கோடியும் விடுவிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 24 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்திற்கு ரூ.285 கோடி வெள்ள நிவாரணமாக அறிவிக்கப்பட்ட அதே வேளையில், கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி ஒதுக்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆந்திரா ரயில் விபத்து : ரயில்வே அமைச்சர் கூறியது பொய்… விசாரணையில் அம்பலம்!
Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இதுக்கு ஒரு முடிவே இல்லையா?