தி கேரளா ஸ்டோரி: கமலை வசைபாடிய இயக்குநர்!

சினிமா

தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் பேட்டி ஒன்றில் பதில் கூறுகிறபோது நேரடியாக பதில்கூறாமல் மறைமுகமாக ”நம் நாட்டில் நிறைய முட்டாள்தனமான கற்பிதங்கள் உள்ளன” என கூறியுள்ளார்.

இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பாஜக இந்த படத்தை ஆதரித்ததுடன் அக்கட்சி ஆளும் மாநில அரசுகள் வரிவிலக்கு சலுகைகளை வழங்கியது. இந்தியபிரதமர் நரேந்திர மோடி படத்தை பாராட்டி கருத்து தெரிவித்தார். இதனால் சர்வதேச அளவில் ’தி கேரளா ஸ்டோரி’ படம் கவனம் பெற்றது.

இந்தியாவில் அதிக மக்கள்தொகை உள்ள மேற்குவங்கம், தமிழ்நாடு என இரண்டு மாநிலங்களிலும் முழுமையாக இப்படம் திரையிடப்படவில்லை என்பதுடன்
இந்திய சினிமா பாக்ஸ்ஆபீசில் ஆதிக்கம் செலுத்தும் தென்னிந்திய மாநிலங்களில் வசூல் ரீதியாக வெற்றிபெறாத இப்படம், இந்தி பேசும் மாநிலங்களில் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியுள்ளது.

உலகம் முழுவதும் தி கேரளா ஸ்டோரி ரூ.200 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் கடந்த வாரம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அபுதாபியில் நடைபெற்ற திரைப்பட துறைசார்ந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவில் அவரின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டது.

சர்வதேச கவனம் பெற்ற இந்நிகழ்வில் கமல்ஹாசன் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த கமல்ஹாசன், தி கேரளா ஸ்டோரி படம் பற்றிய கேள்விக்கு “பிரச்சார படங்களுக்கு எதிரானவன் நான். வெறுமனே லோகோவுக்கு பக்கத்தில் ‘இது உண்மைக் கதை’ என எழுதினால் மட்டும் போதாது. அதில் உண்மை இருக்க வேண்டும்.

தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல” என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்தியாவின் எந்தவொரு முன்னணி நடிகரும் தி கேரளா ஸ்டோரி படம் பற்றி இது போன்றதொரு விமர்சனத்தை பகிரங்கமாக பொதுவெளியில் இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் இந்த விமர்சனத்துக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் பதிலளித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இது போன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்வதில்லை. ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று, அப்படி செய்வதை நான் நிறுத்திவிட்டேன். காரணம் ஆரம்பத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை பிரச்சாரப் படம் என்று கூறியவர்கள் படம் பார்த்த பிறகு தங்கள் மனதை மாற்றிக் கொண்டனர். படம் பார்க்காதவர்கள்தான் அதனை விமர்சித்து வருகின்றனர். படத்தை பார்க்காமலேயே அதனை பிரச்சாரப் படம் என்று விமர்சித்து வருகின்றனர்.

நம் நாட்டில் நிறைய முட்டாள்தனமான கற்பிதங்கள் உள்ளன. பாஜகவினருக்கு படம் பிடிக்கிறது என்கிற காரணத்திற்காக இது அவர்களுடைய படம் என்று அர்த்தம் அல்ல. உலகம் முழுவதும் 37 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இந்தப் படம் பிடித்துள்ளது. அவர்கள் விமர்சிக்க வேண்டுமென்றால், அவர்கள் என்னிடம் நேரடியாக போன் செய்து அதுகுறித்து விவாதிக்கிறார்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. விமர்சிப்பவர்களுக்கு நான் விளக்கம் கொடுப்பதில்லை என்று சுதிப்டோ சென் கூறியுள்ளார்.

இராமானுஜம்

அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன்: வசூல் எவ்வளவு?

எம்.டி.சி பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தம்!

மாணவர்களின் இலவசப் பயணத்துக்கு ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ்!

மேட்டூர் அணை திறப்பு: கூடுதல் சாகுபடி செய்ய இலக்கு!

The Kerala Story director Sudipto Sen reacts to Kamal Haasan
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

2 thoughts on “தி கேரளா ஸ்டோரி: கமலை வசைபாடிய இயக்குநர்!

  1. Sadugudu,unmayilaye indapadathai partheera? Malayala seithigal solvathellam poyya? Vannakkanaadi anindu parkireergal. Evarukkaaga? Orusasrbaga sinfikksdeer. oru nall nadu nilayaga sindikkum thiran tholaindu poiyiruppadu theriya varum.

  2. இயக்குனர் குஜராத் ஸ்டோரி எடுப்பானா, உண்மை சம்பவம் அது மட்டுமல்ல நிகழ்காலம் கூட… பிபிசி ஆவண படத்தை குறை கூறியவன் கற்பனை படத்தை உண்மை என்கிறான். பணத்துக்ககாக எது வேண்டுமானாலும் எடுக்கலாமா… மதம் தவிர்த்து மனிதநேயம் பற்றி எடு…. இவன் படத்தை புறக்கணிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *