பட்டப் பகலில் கோயம்பேடு பாலத்தில்… இப்படியுமா? வைரலாகும் வீடியோ!

தமிழகம்

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் இளம்பெண் ஒருவரை அவரது ஆண் நண்பர் ஹெல்மெட்டால் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

சென்னை கோயம்பேடு சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் என எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் பகுதி கோயம்பேடு சாலை. இந்நிலையில், கோயம்பேடு மேம்பாலத்தில் நேற்று (ஏப்ரல் 26) மதிய வேளையில்,  ஆணும் பெண்ணும் என இருவர் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், திடீரென அந்த மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய ஆண் நண்பர், சாலை என்றும் பாராமல் இளம்பெண்ணை சரமாரியாக தாக்க தொடங்கினார். முதலில் கைகளால் தாக்கிய ஆண் நண்பர், பின்னர் தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை எடுத்து இளம்பெண்ணை தாக்கியுள்ளார்.

இதனால், அந்த பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதன் பிறகு சாலையில் மயக்கமடைந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அந்த ஆண் நண்பர் மற்றவர்களிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால், பிரச்சனை ஏதும் வந்துவிடுமோ என பயந்து இளம்பெண்ணை அந்த ஆண் நண்பரே இருச்சக்கர வாகனத்தில் அமர வைத்து அங்கிருந்து அழைத்து சென்றுள்ளார்.

வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் என்பவர் நடுரோட்டில் ஆண், பெண் சண்டையிடுவதை பார்த்து இதனை வீடியோவாக எடுத்ததோடு, அதனை ஆன்லைன் வழியாக சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இவர் எடுத்த இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், கோயம்பேடு மேம்பாலத்தில் இளம்பெண்ணை தாக்கியது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரோஷன் குமார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோடை குடிநீர் தட்டுப்பாடு: ரூ.150 கோடி ஒதுக்கீடு!

கோவையில் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி மனு!

+1
1
+1
0
+1
3
+1
2
+1
0
+1
2
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *