நடிகர் சூர்யா இயக்குநர் சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.
சூரரைப் போற்று திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என்று பல ரசிகர்கள் வருத்தப்பட்டு கொண்டிருந்த நிலையில் நடிகர் சூர்யாவின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பை தொடர்ந்து சூர்யா 43 படத்திற்கு “புறநானூறு” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
இயக்குநர் சிறுத்தை சிவாவின் “கங்குவா” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென புறநானூறு திரைப்படத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதனை தொடர்ந்து, சூர்யாவுக்கும் சுதாவுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாகத்தான் புறநானூறு திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து சூர்யா 43 திரைப்படத்தின் எந்த அப்டேட்டுகளும் வெளியாகாமல் இருந்த நிலையில் சூர்யாவின் 44 படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சூர்யா 44 படத்தின் அறிவிப்பு வெளியானவுடன் சுதா கொங்கராவின் நிலை என்ன என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் சூர்யாவின் புறநானூறு படத்திற்கு முன்னதாக இயக்குநர் சுதா நடிகர் துருவ் விக்ரமை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
அர்ஜுன் வர்மா, மகான் ஆகிய படங்களில் நடித்துள்ள துருவ் விக்ரம் தற்போது இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் ஹீரோவாக கமிட்டாகி இருக்கிறார்.
இதற்கிடையில் இயக்குநர் சுதா துருவ் விக்ரமுக்கு ஒரு கதையை சொல்ல அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்திருப்பதால் அந்த படத்தில் நடிக்க துருவ் ஓகே சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது.
சுதா படத்திற்கான துருவ் விக்ரமின் கால்ஷீட் குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் அது உறுதியாகிவிட்டால் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான “Sarfira” வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமன்னாவின் சிவசக்தி அவதாரம்..! ஒடேலா – 2 வீடியோ இதோ..!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
“குரங்கு பெடல்” ஃபர்ஸ்ட் சிங்கிள்: ஸ்பெஷல் என்ன?
கிச்சன் கீர்த்தனா: பாவ் பாஜி தோசை ரோல்