ஜோதிகா நடிப்பில் ஒரு படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவிருக்கிறது. அதுகுறித்த விவரங்களை இங்கே நாம் பார்க்கலாம்.
ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் உடன்பிறப்பே. ஜோதிகாவின் 5௦-வது படமாக வெளியான உடன்பிறப்பே படம் பாக்ஸ் ஆபிஸில் கலவையான விமர்சனங்களையேப் பெற்றது.
இந்தநிலையில் உடன்பிறப்பே படத்தின் இரண்டாவது பாகத்தினை எடுக்க, இயக்குநர் சரவணனுக்கு 2 டி என்டெர்டெயின்மெண்ட் சார்பில் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
தமிழில் போதிய வரவேற்பு கிடைக்காவிடிலும், ரத்த சம்பந்தம் என்ற பெயரில் தெலுங்கில் வெளியான இப்படம் அங்குள்ள பி, சி சென்டர்களில் நன்றாக ஓடியது.
அதோடு அண்ணன் – தங்கை பாசத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட உடன்பிறப்பே ஓடிடி தளமான அமேசான் பிரைம் மற்றும் சாட்டிலைட் சேனலான விஜய் தொலைக்காட்சி இரண்டிலும், அதிகபட்ச டிஆர்பியை பெற்றுள்ளது.
இதையெல்லாம் வைத்துத்தான் இப்படத்தின் 2-வது பாகத்தினை எடுக்கும் முடிவிற்கு ஜோதிகா வந்துள்ளதாக தெரிகிறது.
அதோடு முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்தினையும் பிழியப்பிழிய செண்டிமெண்ட் காட்சிகளால் நிறைக்குமாறு, ஜோதிகா தரப்பில் இருந்து இயக்குநருக்கு அன்புக்கட்டளையும் இட்டிருக்கிறார்களாம்.
இதனால் விரைவில் உடன்பிறப்பே படத்தின் 2-வது பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடிக்கிறார்களா? இல்லை வேறொரு கோணத்தில் சரவணன் திரைக்கதையினை அமைக்கப்போகிறாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியர்கள் மூன்றில் இருவருக்கு… உயர் ரத்த அழுத்த பாதிப்பு!
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால்… : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வாக்குறுதி அளித்த ஸ்டாலின்
மதிமுக, சிபிஎம் கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியீடு!