சென்னையில் பால்கனியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய், கோவையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் இருந்து ஒரு குழந்தை தவறி விழுந்தது.
தவறி விழுந்த குழந்தை மீட்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், குழந்தையின் தாய் ரம்யா, கோவை காரமடையில் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில், இன்று (மே 19) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் ரம்யா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக பெண்ணை மணந்த கொரிய இளைஞர்!
Thailand Open 2024: மீண்டும் ஒரு பட்டத்தை வென்ற சாத்விக் – சிராக்